லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல்: உ.பி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல்: உ.பி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல்: உ.பி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

உத்தரபிரதேச மாநில ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று லஷ்கர்- இ- தொய்பா மிரட்டில் விடுத்துள்ளதை அடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள ஃபிரோஸ்பூர் ரயில் நிலைய மேலாளருக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இருந்து இருந்து மிரட்டல் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அதில், உத்தரபிரதேச மாநில ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்படும் என்றும் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம், மவுலானா அபு ஷேக் என்ற பயங்கரவாதியின் கையெழுத்துடன் வந்து ள்ளது.

பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததையடுத்து மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத் துக்கு இடமான பொருட்கள் கிடந்தால் பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அதோடு முக்கிய வழிபாட்டுத் தலங் களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com