
உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று பதவி ஏற்கிறார்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின
இதனிடையே லக்னோவில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் சட்டமன்ற குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். மதியம் 2.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.