இம்மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய மகன்தான் அர்ஜுன் டெண்டுல்கர். ஆல்-ரவுண்டரான அர்ஜுன் உள்ளூர் தொடர்களில் கலக்கி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தான் தன்னுடைய ரோல் மாடல் என கூரும் அர்ஜுன், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்ததுடன், 4 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டி பயிற்சியின் போதும் மும்பை வீரர்களுக்கு அவ்வப்போது பந்து வீசி வந்த அர்ஜுன், தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார்.
இந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. 25 பெயர் கொண்ட உத்தேச அணியில் டெண்டுல்கர் மகன் இடம் பெற்றுள்ளதை சச்சின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடிய இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 19-வயதுக்கு உட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் கீழ் டெண்டுல்கர் மகன் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix