[X] Close

ஆம்புலன்ஸ் வராததால், பெட்ஷீட்டில் கட்டி நிறைமாத கர்ப்பிணியை 7 கி.மீ தூக்கிச்சென்ற அவலம்!

No-Ambulance--Family-Carries-Kerala-Pregnant-Woman-For-7-km-In-Bedsheet

ஒரு கம்பில் பெட்ஷீட்டை கட்டி, அதில் நிறைமாதக் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ளது, அட்டப்பாடி பகுதி. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலைப்பகுதி இது. இங்குள்ள எடவன்னி ஊரைச் சேர்ந்தவர் தணலி. இவர் மனைவி, மணி. இவர் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மணிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து புதுர் மருத்துவமனைக்கு தகவல் சொல்லி, ஆம்புலன்ஸை அனுப்பக் கோரினர். மூன்று மணி நேரமாகியும் ஆம்பு லன்ஸ் வரவில்லை. பிறகு சாலை சரியில்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் வராது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதையடுத்து மலைக்கிராம இளைஞர்கள் ஒரு கம்பில் பெட்ஷீட்டைக் கட்டினர். அதில் கர்ப்பிணிப் பெண்ணை படுக்க வைத்து காட்டின் வழி யே 7கி.மீ நடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

’மலைக் கிராமத்துக்குள் சாலை வசதியில்லை. ஜீப் மட்டுமே வரும். மழை காரணமாக பாதை சரியில்லாததால் அதுவும் வரவில்லை. இதனா ல் அபாயகரமான பாதையில் நடந்து கர்ப்பிணியை தூக்கி வரவேண்டியதாகிவிட்டது’ என்று ஆதிவாசிகள் சங்கத் தலைவர் கே.ஏ.ராமு தெரி வித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement
[X] Close