காலா படத்துக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காலா படத்துக்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை. மக்களின் பிரச்சனைக்காகத் தான் எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாழ்க்கை அரசியலாக தான் இருக்கிறது. அதனால் நான் எது பேசினாலும் அரசியலாகத் தான் இருக்கும். இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த வரவேற்பால் தயாரிப்பாளர் தனுஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், கர்நாடகாவில் காலா படம் முழுமையாக வெளியாகாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ரஞ்சித், “கர்நாடகாவில் காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும். அதில் சில பிரச்னைகள் சென்றுகொண்டிருக்கிறது. அது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
காலா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பிறகு வரும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதானமான இடங்களில் அமைந்திருக்கும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்று அதிகாலை சிறப்புக்காட்சிகளை காண வந்த ரசிகர்கள் திரையரங்கத்தின் முன் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!