திருச்சியைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மலேசியாவைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் கடந்த மாதம் 25ஆம் தேதி இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் வெட்டிக்காயங்கள் இருந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இது கொலை என தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மற்ற காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மற்ற காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர் யாராவது காணாமல் போயுள்ளனரா என விசாரித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி மன்னார்குடியை சேர்ந்த நாகவள்ளி என்ற பெண் தனது மகனை காணவில்லை என திருச்சி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். பூக்கடையில் வேலைப்பார்த்து வந்த தனது மகன் விஜயராகவனை கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லை என அந்தப்புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அந்தப் புகாரில் தெரிவிக்கப்படிருந்த அடையாளமும் சென்னையில் சடலமாக மீட்கப்பட்டவரின் அடையாளமும் ஒத்துப்போனது. இதனையடுத்து காவல்துறையினர் நாகவள்ளியை சென்னை வரவழைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குவைக்கப்பட்டிருந்த உடல் தனது மகனுடையது தான் என அடையாளம் காட்டினார்.
காவல்துறை விசாரணையில், விஜயராகவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மலேசியா சென்றது தெரியவந்தது. அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்திய நிர்மலா என்பவருக்கும் விஜயராகவனுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நிர்மலாவின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து விஜயராகவன் திரும்பி வந்துவிட்டார்.
இங்கு வந்தவர் திருச்சியில் உள்ள பூக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இருப்பினும் விஜயராகவனுக்கும் - நிர்மலாவுக்கும் இடையேயான உறவு தொடர்ந்தது. மலேசியாவில் இருந்து அடிக்கடி நிர்மலா திருச்சிக்கு வந்து விஜயராகவனை சந்தித்துள்ளார். இவர்கள் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததுள்ளனர்.
ஒருமுறை நிர்மலாவை பின்தொடர்ந்து திருச்சி வந்த அவரது கணவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே 15-ம் தேதி திருச்சி பாலக்கரையில் நிர்மலாவும், விஜயராகவனும் சந்தித்துள்ளனர். அதன்பிறகு அவர்களை காணவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு விஜயராகவன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விஜயராகவனை கொலை செய்து விட்டு நிர்மலா மலேசியா தப்பிச் சென்றாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா எங்கே என்ற தகவல் தெரியாததால் தகாத உறவை கைவிட மறுத்த விஜயராகவன் மற்றும் நிர்மலாவை அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி