[X] Close

விராத் கோலியின் காயத்தை கிண்டல் செய்த மேக்ஸ்வேல்

Maxwell-mocks-Virat-Kohli-s-injury

ராஞ்சி டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் வீராத் கோலியின் தோள்பட்டை காயம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விமர்சித்தார்.


Advertisement

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஃபீல்டிங் செய்யும்போது, விராத் கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பேட்டிங் செய்ய வருவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இன்று 4ஆவது வீரராக களமிறங்கிய விராத் கோலி, 6 ரன்களில் அவுட் ஆனார். அப்போது தனது தோள்பட்டை ஆட்டிக்காட்டி விராத்தின் காயத்தை கிண்டல் செய்தார் மேக்ஸ்வேல்.

ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கின் போது கேப்டன் ஸ்மித் செய்த டி.ஆர்.எஸ் முறையீட்டை மூன்றாவது நடுவர் நிராகரித்தார். இந்த சம்பவத்தின்போது வீரர்கள் அறையில் இருந்து வெளியே வந்து விராத் கோலி கைத்தட்டியது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close