[X] Close

ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் அர்ச்சனா விளக்கம்

Dr--Archana-explains-the-Arumugasami-Commission

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விளக்கத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்ததாக மருத்துவர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து வந்தவர் மருத்துவர் அர்ச்சனா. சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் மருத்துவர் அர்ச்சனாவின் குரல் இடம்பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் அர்ச்சனா மற்றும் செவிலியர் ரேணுகா ஆகியோருக்கு கடந்த 2-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் இன்று ஆஜராகினர்.

 3 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியில் வந்த அர்ச்சனா, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கத்தை அளித்தாகக் கூறினார். மேலும், ஜெயலலிதா பேசிய ஆடியோ தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி குறித்து கேட்டதற்கு மருத்துவர் அர்ச்சனா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close