சென்னை மெரினாவில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு செல்போன், பைக்கை திருடிச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். வயது 29. இவர் நேற்றிரவு டாக்டர் பெசன்ட் சாலை பறக்கும் ரயில் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் ஆனந்தை வழிமறித்து கட்டையால் தாக்கினர். பின்பு மயக்கம் அடைந்த ஆனந்திடம் இருந்து அந்த 3 நபரும் செல்போனை பறித்தனர்.
இதன்பின் ஆனந்தை கத்தியால் குத்திவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தையும் பறித்து சென்றனர். ஆனந்த் படுகாயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix