ம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்?

ம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்?
ம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்?

மத்தியப் பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக காங்கிரஸ் ஆதாரம் அளித்திருப்பதை தொடர்ந்து, விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பான ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் இரு குழுக்களை அமைத்துள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வைத்திருப்பதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா அரசு வேண்டுமென்றே போலி வாக்காளர் அட்டைகளை உருவாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com