Published : 03,Jun 2018 03:58 PM

கல்லூரி நிதி குறித்து கேள்வி எழுப்பிய மாணவருக்கு அடி, உதை

Collision-between-college-students-in-Kolkata

கொல்கத்தாவில் கல்லூரிக்காக திரட்டப்பட்ட நிதி என்னவானது ? என கேள்வி எழுப்பிய மாணவன், உடைகள் களையப்பட்டு தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், பழைய மாணவர்களுடன் இணைந்து கல்லூரிக்காக நிதி திரட்டி உள்ளனர். இந்நிலையில் திரட்டிய நிதியை செலவு செய்தது குறித்து கல்லூரியின் பழைய மாணவர்களிடம் முதலாமாண்டு மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பழைய மாணவர்கள்‌, கேள்வி எழுப்பிய மாணவனை உடைகளை களைந்து அவமானப்படுத்தியதோடு, அடித்து உதைத்து தாக்குதலும் நடத்தியுள்ளனர். மாணவனை துன்புறுத்தி அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்