
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்களும் கருணாநிதி நீண்ட நாட்கள் வாழ தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியுடன் தான் ஏற்கனவே சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.