[X] Close

சென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

Rain-in-chennai--People-Happy

சென்னையில் நங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்ததால் மக்கள் கடுமையாக அவதியுற்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது. சென்னையின் பல இடங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.


Advertisement

இந்நிலையில் சென்னையின் நங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் கடுமையான புழுக்கத்தால் மக்கள் அவதியுற்ற நிலையில் தற்போது பெய்யும் மழையில் சென்னை குளிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close