Published : 18,Mar 2017 09:12 AM

பாஜகவில் இணைந்தது பாக்கியம்: கங்கை அமரன்

Joining-BJP-is-Pleasure--Gangai-Amaran

பாஜக-வில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுவதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் திரைப்பட இயக்குனரான கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேசும்போது, பிரதமர் மோடியின் கொள்கை, திட்டங்கள் தான் என்னை ஈர்த்தது. பாஜக-வில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தமிழகத்தில் பாஜகவின் எழுச்சிக்கான ஆரம்பம் ஆர்.கே.நகர் தேர்தல். இத்தொகுதியை பாஜக கைப்பற்றும் என உறுதி அளித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்