[X] Close

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது

Man-killed-child-in-haryana

4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இனிப்புக் கடை நடத்தி வந்த நிலையில் இவரிடம் வீரேந்தர் என்ற இளைஞர் வேலை செய்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று குமாரின் 4 வயது மகளை கடையிலிருந்து வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி வீரேந்தர் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் நெடுநேரம் ஆகியும் குமாரின் குழந்தை வீட்டை அடையவில்லை.


Advertisement

இதனையடுத்து வீரேந்தர் வீட்டிற்கு சென்றுபார்த்த போது வீரேந்தர் குழந்தையை கொன்று பெட்டிக்குள் அடைத்து வைத்தது தெரியவந்தது. குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தபோது, குழந்தை கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, வீரேந்தர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீரேந்தருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவர் தனது மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close