[X] Close

விஜய், அஜித் யாரைதான் கலாய்க்கவில்லை தமிழ்படம் 2.0 டீசர்?

Tamizh-Padam-2-0-teaser--Vijay-to-Ajith--Diva-s-spoof-film-spares-no-one

‘தமிழ்படம்2.0’ டீசர் வெளியான வேகத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் மிர்ச்சி சிவாவை தனி நாற்காலியை போட்டு உட்கார உதவிய திரைப்படம் ‘தமிழ்படம்’. 2010ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் நிலவி வந்த அத்தனை சம்பரதாய காட்சிகளையும் மரணக் கலாய் கலாய்த்தது. அதனை தொடர்ந்து அந்த ஆண்டின் மாபெரும் வசூல் பட்டியலில் இடம்பிடித்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்தார் மிர்ச்சி சிவா. காமெடி நடிகர்கள் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சி.எஸ்.அமுதன். மீண்டும் மிர்ச்சி சிவாவே நாயகனாக நடித்து வருகிறார். 

இதன் டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அஜித், விஜய் என பலரை கலாய்த்திருக்கிறார்கள். அதைவிட ஒருபடி மேலே சென்று ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற போது அழுதக்காட்சியை அப்படியே காமெடி அடித்திருக்கிறார் சிவா. மேலும் விஷாலின் ‘துப்பாறிவாளன்’ படத்தையும் விட்டு வைக்கவில்லை படக்குழு. ‘விக்ரம் வேதா’ படத்தில் வரும் ‘ஒரு கதை சொல்லட்டுமா?’ வசனத்தையும் நகையாடி இருக்கிறார்கள். அதேபோல் படத்தின் அஃபிஷியல் பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் என்று போட்டு கலாய்த்திருக்கிறார்கள். இந்த டீசர் வெளியான முதல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close