[X] Close

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு மத்திய அரசு கண்டனம்

sterlite-issue--Central-Government-condemns-Tamil-Nadu-government

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் கூறியுள்ளார். 


Advertisement

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே இன்று நடைபெற்ற மத்திய அரசின் 4ஆண்டுகள் சாதனை விளக்கக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரதோர் இதனை தெரிவித்தார். உலக நாடுகள் இந்தியாவை புதிய நாடாக பார்ப்பதாக கூறிய அவர், நிலத்திலிருந்து நேரடியாக விற்பனை என விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி பெருமிதம் தெரிவித்தார்.  

கழிப்பறை வசதி 17 மாநிலங்களிலுள்ள 3லட்சத்து 60ஆயிரம் கிராமங்களில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ரத்தோர் கூறினார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, தமிழக அரசிடம், மத்திய அரசு பேசியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கும், காவல்துறையின் செயல்பாடுகளுக்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது என்றார். 


Advertisement

மேலும் பிரச்னை கைமீறி போகும் அளவிற்கு செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் நிகழும் அனைத்து சம்பவங்களும், நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் அதன் மீது பிரதமர் உடனடியாக கவனம் செலுத்துவார். மத்திய அமைச்சர்களான நாங்கள் அனைவரும் பிரதமரின் பிரதிநிதிகளே. மத்திய அமைச்சர்கள் பிரதமரின் ஒப்புதலுடனே கருத்து கூறுகின்றனர் என்றார் அவர்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close