Published : 18,Mar 2017 07:44 AM
மலையாளத்தில் கால் பதிக்கும் தனுஷ்

கோலிவுட்டில் காக்கா முட்டை, விசாரணை போன்ற விருது பெற்ற படங்களை தயாரித்த தனுஷ், தற்போது மலையாள படத்தைத் தயாரிக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இந்தப்படத்தை, டோமினிக் அருண் இயக்குகிறார். டோவினோ தாமஸ் ஹீரோவாகவும், நேகா ஐயர் ஹீரோயினாகவும் நடிக்க இருக்கின்றனர். டார்க் காமெடி வகையில் இருக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு இன்று தொடங்கும் என தெரிகிறது.