[X] Close

30 ஆயிரத்தில் இருந்து 11 கோடியாக மாறிய சொத்து - மோசடி செய்த வங்கி அதிகாரி

peddasetty-durga-prasad-andhra-pradesh-grameena-vikas-bank

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பெத்தாசெட்டி துர்கா பிரசாத் என்பவர் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததை சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆந்திர பிரதேசம் கிராமீன விகாஸ் வங்கியின் இஸ்னாபூர் கிளையில் லோன் வழங்குவதற்கான கள அதிகாரியாக 2016ம் ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார். இவர் வங்கியில் பணி செய்த நாட்களில் மோசடிகளில் ஈடுபட்டு 11.11 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 


Advertisement

வங்கியில் பணிக்கு சேர்வதற்கு முன்பு ரூ33,072 ஆக மட்டுமே இருந்த சொத்து மதிப்பு ஒன்றரை ஆண்டுகளில் 11.46 கோடியாக அதிகரித்தது. பெத்தாசெட்டி வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றியுள்ளார். இவர் வீட்டு வசதி கடன்களை பல்வேறு நபர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் பெற்றுள்ளார். லோன் மூலம் வரும் பணத்தை அவரது வாங்கி கணக்குகளுக்கு அனுப்பி விடுவார். இப்படியே, பெத்தாசெட்டி அந்த வங்கியில் பணி செய்த 20 மாதங்களில் மட்டும் 11 கோடி ரூபாக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஆனால் வங்கியில் பணி செய்த காலத்தில் அவருடைய மொத்த வருமானமும் ரூ 8,50,000/- மட்டுமே.

01.01.2016 முதல் 01.08.2017 வரை விவரம்:-


Advertisement

தொடக்க சொத்து மதிப்பு - ரூ 33,072/-
முடிவில் சொத்து மதிப்பு - ரூ 44,12,793/-
வருமானம்              -  ரூ 8,50,000/-
செலவு                  -  ரூ 11,11,00,000/-
சொத்து உயர்ந்தது       - ரூ 43,79,721/-
சேமிப்பு                 -  ரூ 11,02,50,000/-
சொத்து + சேமிப்பு       - ரூ 11,46,29,721/-

சொத்து மதிப்பு அதிகரித்த சதவீதம் : 13485 சதவீதம் (11,46,29,721/8,50,000)

இதனையடுத்து பெத்தா செட்டி மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close