[X] Close

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி தந்தது யார்? - நீதிமன்றம்

sterlite-issue--The-court-Questioned--the-Tamil-Nadu-Government

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, வழக்கறிஞர் முத்து அமுதநாதனும், கந்தகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் விதிமுறைகள்‌ மீறப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன.

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை தமிழக அரசு தரப்பில் விசாரணையின்போது வழங்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் என்ன? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கான விரிவான பதிலை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close