
ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்ததற்க்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே ரஜினி காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கர்நாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ‘காலா’ திரைப்படத்திற்கு தடை விதித்தது.ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.ரஜினி தனது அரசியல் வாழ்க்கைக்கு இந்தப் படம் பெரிதும் உதவும் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆகவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரான நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் "ரஜினி அவர்கள் காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறியது அவரது பேச்சு சுதந்திரம். மேலும் அந்த கருத்து போதுநலன் கருதிய பொறுப்பாகும். அதற்கு ‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது எப்படி சரி ? காலா திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாக அம்மாநில திரைப்பட சகோதரர்கள் பேசி தீர்வு காணவேண்டும். ஏன் என்றால் நாம் எல்லோரும் இந்தியர்களே" என நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.