[X] Close

பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் சூறாவளி காற்று: 40 பேர் பலி

At-least-38-killed-in-thunderstorms-in-Uttar-Pradesh--Bihar-and-Jharkhand

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இடி மின்னலுக்கு 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான இடி மின்னலுடன் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காற்றும் அசூர வேகத்தில் வீசி வருகிறது. இதனால் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


Advertisement

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேபோல் ஜார்க்கண்டில் இடி மின்னல் தொடர்பான இயற்கை சீற்றங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காற்று வீசுவதால் மின் கம்பிகளும், மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுகின்றன. அப்போது அதில் சிக்கியவர்களும் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். பீகாரிலும் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இன்றும் பலத்த காற்றுடன் இடி மின்னல் இருக்கும் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close