Published : 29,May 2018 01:59 AM

‘குளத்தை காணோம்’  செலவுப் பண்ண 4 லட்சம் எங்க போச்சு ?

Pool-Missing-Tirupur-People-Raise-a-Complaint

 

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் பகுதியில் திரைப்பட பாணியில் குளத்தை காணவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

2017 - 2018ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை அறிக்கையில், ரூ. 4,96,000 நிதி ஒதுக்கி புதிதாக குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததது. அப்பகுதியில் குளம் அமைக்கும் பணி ‌எதுவும் நடைபெறாததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடை‌ந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்து, அப்பகுதியில் எவ்விதமான குளமும் அமைக்கப்படவில்லை என்ற சான்றிதழை பெற்றனர். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நஞ்சியம்பாளையம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் ரமேஷிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்