Published : 26,May 2018 03:59 PM
“ஆட்சியை கலைக்க இதைவிட்டால் சிறந்த தருணம் கிடைக்காது” - பாண்டிராஜ்

நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்காத நீங்கள், எங்களை சுடுவதையெல்லாம் பார்க்கும் போது இந்த ஆட்சி எப்போது முடியும் என்று ஒவ்வொரு நாளும் எண்ண தோன்றுகிறது என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், ஒரு அரசாங்கத்தை திட்டினால் சுடுவோம் என்றால் சீமான், ஸ்டாலின் போன்றவர்களைதான் சுட வேண்டும். காரணம் அவர்கள்தான் அரசாங்கத்தின் செயல்பாடுகளை அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஒரு அன்றாட வாழ்கைக்காக போராடும் மனிதர்களை சுடுவதை விட கேவலம் வேறுயெதுமில்லை. நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து ஆட்சி காலம் என்பது ஐந்து ஆண்டு என்பதை மாற்றி மூன்று ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளாக மாற்ற வேண்டும். அப்போது தான் இந்த நாடு உருப்படும்.
நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்காத நீங்கள், எங்களை சுடுவதையெல்லாம் பார்க்கும் போது இந்த ஆட்சி எப்போது முடியும் என்று ஒவ்வொரு நாளும் எண்ண தோன்றுகிறது. நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா அம்மையாரைதானோ தவிர உங்களை அல்ல. இந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. ஒரு ஆட்சியை கலைக்க இதைவிட்ட சிறந்த தருணம் கிடைக்காது என விமர்சித்தார்.