[X] Close

கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு!

2-men-set-off-bomb-in-Indian-restaurant-in-Canada-and-flee--15-people-injured

கனடாவில் இந்திய உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கனடா நாட்டின் மேற்கு டொரன்டோ நகரில் இருந்து 32 கி.மீ தூரத்தில் இருக்கிறது மிசிஸிசவ்ஹா நகரம். இங்கு பாம்பே பேல் என்ற ரெஸ்டாரன்ட் உள்ளது. இந்திய உணவகமான இங்கு, இந்தியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் வருவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல ஏராளமானோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது உணவகத்துக்குள் திடீரென்று குண்டு வெடித்தது. சாப்பிட்டுக் கொண் டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.


Advertisement

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே குண்டு வைத்ததாக சந்தேகப்படும் இரண்டு பேரின் புகைப்படங்களை கனடா போலீசார் வெளியிட்டுள்ளனர். 

கடந்த மாதம் பாதசாரிகள் மீது லாரியை ஓட்டிச் சென்று 10 பேரை கொன்ற சம்பவம் டொரன்டோவில் நடந்தது. இதையடுத்து நடந்துள்ள இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close