[X] Close

ஸ்டெர்லைட்க்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ், திமுகதான்: பொன்.ராதாகிருஷ்ணன்

BJP-is-the-first-party-to-protest-against-sterlite-Plant--Pon-Radhakrishnan

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்ட போதே அதனை எதிர்த்து பாஜக போராடியதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அப்போது ஆலைக்கு அனுமதி அளித்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இப்போது பாஜக மீது வீண் பழி சுமத்துவதாகவும் சாடினார்.


Advertisement

இதுதொடர்பாக பேசிய அவர், “திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிய 1996-ஆம் ஆண்டு காலக் கட்டத்திலேயே ஸ்டெர்லைட் ஆலை அனுமதிக்கு எதிராக போராடியது பாஜகதான். தூத்துக்கடியில் 3 நாட்கள் உண்ணாவிரதம் உள்பட பல போராட்டங்களை அப்போது நடத்தியவன் நான். போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டேன். ஆனால் மருத்துவமனையிலும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டேன்.


Advertisement

இந்த ஆலையை கொண்டு வர முழுக் காரணமாக இருந்த காங்கிரஸ், திமுக, அதிமுக இப்போது செய்யும் பிரச்சாரம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை ஸ்டெர்லைட் ஆலையின் எதிர் போராளி முறையில் தூத்துக்குடி மக்களுக்கும் தமிழக மக்களுக்குள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பாஜக கட்சி அன்றே ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தது” என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close