Published : 24,May 2018 03:24 PM

‘நரகாசூரன்’ கார்த்திக் நரேனுக்கு என்னதான் பிரச்னை?: அர்விந்த்சாமி ஓபன் டாக்

naragasooran-arvind-swamy-interview

வார பத்திரிகை ஒன்றிற்கு அர்விந்த் சாமி அளித்துள்ள பேட்டியில் அவரது ‘நரகாசூரன்’ படம் பற்றிய பிரச்னை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘நரகாசூரன்’. அந்தப் படத்தை கெளதம் மேனன் தயாரித்து வருகிறார். அந்தப் படத்தின் தயாரிப்பு சம்பந்தமான விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட கார்த்திக் ‘எங்களை எவ்வளவு கேவலமாக நடத்துனீற்கள்’ எனும் பொருள்படும் வகையில் பேசி இருந்தார். அந்தப் பிரச்னை பயங்கரமாக பரவியது. அதற்கு கெளதம் பதில் அளித்திருந்தார். ஆனால் அர்விந்த்சாமி பதில் ஏதும் கூறவில்லை. ட்விட்டரில் கருத்திட்டதுடன் சரி. இப்போது அவர் ஆனந்த விகடன் பத்திரிகையில் மெளனம் கலைத்திருக்கிறார். 

“கார்த்திக் நரேன் என்கிட்ட ஒரு ப்ராஜெக்ட் இருக்கு, உங்களை சந்திக்கலாமா?னு கேட்டார். சந்திச்சோம். அந்தப் படத் தயாரிப்பாளர் எனக்கு போன் பண்ணி ‘நான் தான் படத்தை தயாரிக்கிறேன். உங்களுக்கு கதை பிடிச்சிருக்கா?னு கேட்டார். இந்த ஜானர்ல நான் நிறைய படங்கள் பண்ணினது இல்லை. கார்த்திக் நரேனின் ஸ்கிரீன் ப்ளே சென்ஸ், கிளாரிட்டி பிடிச்சிருக்கு, எனக்கு மனோஜ் நைட் சியாமளன் ஞாபகம் வந்துச்சு. அவருடைய பயணத்தில் எனக்கான பங்காக இந்தப் படம் பண்றேன்னு சொன்னேன். பிரச்னை என்னென்னனு இப்ப சொன்னா நல்லா இருக்காது. அதெல்லாம் தீர்க்கப்பட்டு வருகிறது. பிரச்னையப்ப கார்த்திக்கை நான் சப்போர்ட் பண்ணணும்னு ஆதரவா ஒரு ட்வீட் போட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்