[X] Close

மீண்டும் தடியடி... தூத்துக்குடியில் பதற்றம்

Clashes-between-locals-and-police-outside-General-Hospital-in-Thoothukudi

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்திருந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி களைத்தனர்.


Advertisement

 தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் பொது இடங்களில் கூடவே பேரணி நடத்தவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மருத்துவமனை பகுதியில் திரண்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர்.

இதுதொடர்பாக மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் கூறுகையில், வன்முறையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வன்முறையை தூண்டிவிடுவோர், சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close