
வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்த்தால் அந்தப் போராட்டம் நீர்த்து போகும்” என கூறியுள்ளார்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டம் - ஒழுங்கை காப்பது அரசின் கடமை என்று கூறியுள்ள அவர், மக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல என்றார்.