Published : 22,May 2018 11:55 AM

”இப்பொழுதாவது மவுனத்தை களையுங்கள் பிரதமரே” - விஷால் ஆதங்கம்

Vishal-condemn-Gun-fire-on-sterlite-protesters

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இப்பொழுதாவது பிரதமர் தனது மவுனத்தை களைக்க வேண்டுமென்று நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய ஆழ்ந்த இரங்கல். சமூக பிரச்னைக்காக போராட்டம் நடைபெற்றுள்ளது. தனி மனிதப் பிரச்னைக்காக அல்ல. தூத்துக்குடி மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதால்தான், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரதமர் அவர்களே, இப்பொழுதாவது உங்கள் மவுனத்தை களையுங்கள். போராட்டம் என்பது ஜனநாயகத்தில் உள்ள அம்சம் என்று பாஜக கூறுகிறது, அதனை மக்கள் ஏன் செய்யக் கூடாது?. அரசு என்பது மக்களுக்காக செயல்பட வேண்டும். மற்றவர்களுக்காக அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். 

             

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்