[X] Close

காங்கிரஸின் விமர்சனங்கள் என்னை வேதனைப்படுத்தியது: தேவ கவுடா பேட்டி

Congress-criticisms-is-hurt-me-said-Deva-Gowda

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் - மஜத அணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்க இருப்பதால் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரானவர்களையும் மற்றும் மாநில முதல்வர்களுக்கு தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார்.  


Advertisement

இதனையெடுத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை ஓரணியில் திரட்டி வருவதால் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை வரும் 2019 மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைய இந்தப் பதவியேற்பு விழா வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தி இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் "காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமில்லை" என்று தேவகவுடா தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியை உருவாக்கும் என்பது இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 


Advertisement

  
குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை அழைத்தற்கு காரணம் என்ன?

பாஜகவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களை இந்தப் பதவியேற்பு விழாவுக்கு நான் அழைத்தற்கு பல்வேறு அர்த்தங்கள் உண்டு. ஆனால், 2019-ல் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பது மட்டுமே அனைத்து எதிர்கட்சித் தலைவர்களையும் ஒரே தளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதில் சிலர் காங்கிரஸுக்கு எதிரானவர்களாகக்கூட இருக்கலாம். எனவே, இது கடினமான பணியாக இருந்தாலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் நல்ல முடிவு எடுக்கும் என நான் நம்புகிறேன். இது பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவுவாக இருக்கும் எனவும் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இல்லாமல் பாஜக எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்க முடியும் என நினைக்கிறீர்களா ?

இந்தியா முழுவதும் காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்குவது சாத்தியமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். நேர்மையாக பதில் சொன்னால், பாஜக எதிர்ப்புக் கூட்டணியில் காங்கிரஸ் எப்படியும் முன்னணியில் நிற்கும், அதுவே இயற்கையான அங்கமாகிவிடும்.

காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவு எப்படி சாத்தியமாயிற்று ?

நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றுதான் நினைத்தேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்கள் என்னை வேதனைப்படுத்தியது. தேசத்தின் நலன் கருதி எல்லா அவமானங்களையும் பொறுத்துக்கொண்டேன்.  

சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாடகங்கள் குறித்த கருத்து என்ன ?

உச்சநீதிமன்றம் தீர்ப்பு நீதித்துறைக்கு கிடைத்த வெற்றி. இரவு நேரம்கூட பார்க்காமல் உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்து தீர்ப்பு வழங்கியது நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது.

இந்தக் கூட்டணி நீண்ட காலம் இருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா ?

நானோ மகன் குமாரசாமியோ பழைய காயங்களையும், தவறுகளையும் தற்போது பேச விரும்பவில்லை. இந்நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற முறையில் மதச்சார்பின்மை கொள்கைகளுக்காக நிற்க வேண்டிய தருணம் இது. 


நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒரே மேடையில் கூடுவதால் 2019 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையவும் இது வழிவகுக்கும். பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி இந்தப் பதவியேற்பு விழாவை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
 

தகவல்கள் : தி இந்து ஆங்கில நாளிதழ்


Advertisement

Advertisement
[X] Close