சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை

சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை
சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை

திருப்பூரில் சாலை விபத்தில் மகனை  இழந்ததால் மனமுடைந்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் - சுதா தம்பதியின் ஒரே மகன் நிசாந்த். இவர் தனது உறவினரான கிருபாகரனுடன் கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் கோவையிலிருந்து பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்தை ஏற்றி வந்த ஆட்டோ ஈரோடு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

அவிநாசி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் வரும்பொழுது ஆட்டோவில் இருந்த பேப்பர்கப் தயாரிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. அந்த இயந்திரத்தை மீண்டும் ஆட்டோவில் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்த போது நிசாந்த் வந்த இருசக்கர வாகனம் பேப்பர்கப் இயந்திரம் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் நிசாந்த் மற்றும் கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநருக்கு உதவிய கணேசன் என்பவர் காயமடைந்தார். இந்த நிலையில் அவிநாசி அரசு மருத்துவமனையில் நிசாந்தின் பிரேதத்தை அடையாளம் காட்ட வந்த தந்தை சக்திவேல் மற்றும் தாய் சுதா ஆகியோர் துக்கம் தாளாமல் இரவு அவிநாசி அரசு மருத்துவமனையில் குளிர்பானத்திற்குள் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மகனை இழந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com