சென்னை அடுத்த காசிமேட்டில் வீட்டு வாடகை கொடுக்காததால் சிறை வைக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் பூட்டை உடைத்து மீட்டனர்.
காசிமேடு பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி ரங்கநாதன் இவரது வீட்டில் பாப்பாத்தி என்ற மூதாட்டி வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.பூ வியாபாரம் செய்து வரும் பாப்பாத்தி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வாடகை பணத்தை சேர்த்து கொடுப்பதாக தெரிகிறது. கடந்த 4 மாதங்களாக பாப்பாத்தி வாடகை கொடுக்க முடியாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ரங்கநாதனுக்கும் பாப்பாத்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் நேற்று முன் தினம் பாப்பாத்தியை வீட்டில் பூட்டி வைத்து தன்னுடைய வீட்டையும் பூட்டி விட்டு ரங்கநாதன் வெளியூர் சென்றுள்ளார்.பாப்பாத்தி காலையில் எழுந்து வந்து பார்த்த போது வீடு வெளியே பூட்டு போட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செல்போனில் தனது சகோதரிக்கு தகவல் கொடுத்துள்ளார். இரவில் இருந்து எதுவும் சாப்பிடாததால் மயக்கமான நிலையில் படிகட்டில் விழுந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த பாப்பாத்தியை மீட்டனர்.வெளியூர் சென்ற வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் பாப்பாத்தி வீட்டில் இருப்பது தெரியாமல் பூட்டி விட்டுச் சென்றாரா? அல்லது வாடகை பணம் கொடுக்காததால் பூட்டிவிட்டுச் சென்றாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி