Published : 21,May 2018 02:52 PM

இந்தியா மீது உலக வங்கியில் பாகிஸ்தான் புகார்

Pakistan-Complaint-against-India-in-World-Bank

இந்தியாவின் கிஷன்கங்கா நீர்மின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் அரசு உலக வங்கியிடம் முறையிட இருக்கிறது. 

இந்தியா மீது உலக வங்கியில் முறையிட நான்கு பாகிஸ்தான் பிரதிநிதிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர். இரு நாள்களுக்கு முன்பாக கிஷன்கங்கா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி அமைந்திருக்கும் இந்த நீ்ர்மின் திட்டம், 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் உடன்பாட்டை மீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. 

கிஷன் கங்கா ஆற்றில் இருந்து, சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதிக்கு நீரைத் திருப்பும் வகையில் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. அணையின் வடிவமைப்பு, நீர் தேக்கும் அளவு உள்ளிட்டவற்றுக்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா மீது பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்