கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிக்கு தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாஜகவுக்கு 104இடங்களிலும், காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும் ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர். பாஜவை சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸின் மனுவை நள்ளிரவில் விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது வழக்கை ஒத்திவைத்தது. ஆளுநர் அழைப்பின்படி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது சில முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில வழிமுறைகளை நீதிமன்றம் கூறியது. நேற்றைய தினம் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, குமாரசாமியை ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்தார். குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசத்தையும் ஆளுநர் வழங்கியுள்ளார். இதற்கிடையில் குமாரசாமி முதலில் திங்கள் கிழமை பதவியேற்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்று ராஜிவ் காந்தி நினைவு நாள் என்பதாலும் செவ்வாய்க்கிழமை நல்ல நாள் இல்லை என்பதாலும் புதன் கிழமை பதவியேற்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி; நாளை டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ள நிலையில், பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நிரூபிப்பேன் என குமாரசாமி தெரிவித்தார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!