Published : 20,May 2018 02:53 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர் கைது

ஒன்றரை வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 46 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவரை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்துக்கொண்ட அந்த நபர் பாலியல் சீண்டல்களின் ஈடுபட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அவரது தாய் வந்து பார்த்தபோது ஒரு நபர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனைக்கண்ட அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார்.அவரைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். அவரை மடக்கிப்பிடித்த அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சர்வேஷ் (46) என்பது அவர் அப்பகுதியில் டீ விற்பவர் என்றும் தெரிய வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.