[X] Close

“இயக்குநர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாமா?” கமல்ஹாசன் கேள்வி

Can-the-directors-only-come-to-politics--Kamal-Hassan-questioned

ரஜினியின் அரசியல் ஆன்மிக அரசியல் என்றால் அவருடனான கூட்டணி குறித்து யோசிக்கத்தான் வேண்டும் என ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சி புதியதலைமுறையில் ஒளிபரப்பட்டது. அதில் பேசிய கமல்ஹாசன், ஓட்டுக்காக மக்கள் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இப்போது உள்ள அரசியல்வாதிகள் சிலர் மக்களின் பைகளில் உள்ள பணத்தை எடுத்து மக்களுக்கே ஓட்டுக்கான பணமாக கொடுப்பதாகவும் வணிகமாக மறிவிட்ட இந்த அரசியல் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறார்களே என்ற கேள்விக்கு, அப்படியானால் இயக்குனர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாமா? என்றார். மேலும் வரும் காலத்தில் ரஜினியுடன் சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அவர் அரசியலுக்கு வருவதாக மட்டுமே சொல்லி இருகிறார். இன்னும் அவருடைய பாதை முழுமையாகத் தெரியவில்லை. ஒருவேளை ஆன்மிக அரசியல் என்றால் ரஜினி உடனானக் கூட்டணிக்கு யோசிக்கத்தான் வேண்டும் என்றார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close