கர்நாடகா மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி மே 21-ஆம் தேதி பதவியேற்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.
இந்நிலையில் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை இரவு 7.30 மணிக்கு சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாராசமி, “ கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மே 21-ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும், சோனியா காந்திக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளேன். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் வாழ்த்து தெவித்துள்ளனர். மாயாவதியும் என்னை வாழ்த்தியுள்ளார்” என தெரிவித்தார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்