Published : 19,May 2018 04:48 AM

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது?

IAS--IPS-Recent-Updates

 

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்துவருகிறது. 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது இந்திய குடிமைப்பணிக்கு தேர்வாகும் போதே பணி மற்றும் கேடர் ஒதுக்கப்படுகிறது. புதிய முறைப்படி 100 நாள் அடிப்படைப் பயிற்சிக்கு பிறகு பணி, கேடர் ஒதுக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கேடர் எனப்படுகிறது. 100 நாள் பயிற்சியின் போது எடுக்கும் மதிப்பெண்களும் பணி, கேடர் ஒதுக்கீட்டுக்கு கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய முறையால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 26 குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு நடத்துகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்