[X] Close

குதிரை பேரத்தை தடுக்க காங்- மஜத முயற்சி

Congress-try-to-save-MLAs

குதிரை பேரத்தில் இருந்து தடுப்பதற்காக பெங்களூருவில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டனர்.

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்கள் தேவை. ஆனால் பாஜக வசம் 104 உறுப்பினர்களே உள்ளனர். இந்த சூழலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம் எல் ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குதிரை பேரம் நடப்பதாக கூறி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், தங்களது எம் எல் ஏக்களை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ரிசார்டுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

பேருந்து மூலம் ஐதராபாத் சென்ற எம் எல் ஏக்கள் இரு வேறு ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டு கர்நாடக முன்னால் முதல்வர் சித்தராமய்யா சென்றுள்ளார். அதேப்போல் குமாரசாமியும் ஐதராபாத்துக்கு புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிJது. 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close