Published : 17,May 2018 10:59 AM

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு?

Rs-4-a-litre-hike-in-petrol-diesel-prices-coming-up-says-brokerage-firms

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சில தினங்களாக சில பைசாக்கள் மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கர்நாடக தேர்தலால் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால் ஒரே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டெல்லி நிலவரப்படி பெட்ரோல் விலை ரூ75.32, டீசல் விலை ரூ66.79 ஆகவும் உள்ளது. 

சர்வதேச அளவில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலைப்படி இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்