மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு கடந்த 14ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக 38,616 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதில் 10 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் பெரும்பாலான இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலரவப்படி, 1300-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாரதிய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com