காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தபோது தான் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, கர்நாடக மக்கள் நலனுக்காக இல்லாமல் அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருப்பது வெட்கக்கேடானது என்றும் இதுதான் ஜனநாயக படுகொலை என்றும் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா 104 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் பல இடங்களில் படுதோல்வி அடைந்துள்ளது என்று தெரிவித்த அவர், மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். நாட்டில் அவசரகால நிலையை பிரகடனம் செய்த காங்கிரஸ் கட்சியின் வரலாறு அக்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு நினைவில்லையா என்றும் அமித் ஷா வினவியுள்ளார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix