கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ள நிலையில், அவர் எப்படி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி அதிகபட்சமாக 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 இடங்களிலும் , மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் , சுயேட்சை உள்ளிட்டோர் 3 இடங்களிலும் வெற்றிப் பெற்றனர். இதில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றவர். இதனை கணக்கில் கொண்டு பார்த்தால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 இடங்களே தேவை. ஆனால் பாரதிய ஜனதாவிடம் 104 உறுப்பினர்களே உள்ளனர், மீதமுள்ள 8 உறுப்பினர்களுக்கு பாஜக என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை இழுக்க கூடும் என்பதாலேயே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அன்று, பேரவையில் உறுப்பினர்களை எண்ணிக்கையை குறைத்து காட்டி அதாவது எதிரணியில் உள்ள உறுப்பினர்கள் சிலரிடம் பேசி அவர்களை பங்கேற்க விடாமல் செய்து அன்றைய தினம் அவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்குமா? என்ற வினாவும் எழுகிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க கால அவகாசம் இருப்பதால் என்ன மாதிரியான வியூகங்களை பாஜக வகுக்க போகிறது? அதனை காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் எப்படி முறியடிக்கப்போகிறது என கர்நாடக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்