கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியிருந்தனர். இந்த சூழலில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்றிரவு அழைப்பு விடுத்தார். அதனை எதிர்த்து இரவோடு இரவாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் மற்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையின் கண்ணாடி மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது.
எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர்.பெரும்பான்மையில்லாத நிலையில் எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் இந்த தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்