Published : 16,May 2018 01:42 PM

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு காரை கொடுத்து உதவிய கமல்ஹாசன்

Kamal-Hassan-Help-a-Woman-in-Accident-time

கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்திக்கும் வகையிலான பயணத்தை இன்று காலை காந்தி மண்டபத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கினார். அந்தவகையில், குளச்சல் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆன குழி எனும் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் பெண் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த கமல்ஹாசன், உடனடியாக அவரை தனது வாகனம் மூலமாகவே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்