பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ’பிரையன் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அயர்லாந்து அணி, பாகிஸ்தானுடன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியை கடந்த 11-ம் தேதி தொடங்கியது. டப்ளின் நடக்கும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 310 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது.
அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணி பொறுப்புடன் ஆடிவருகிறது. இந்நிலையில் அந்த அணியின் கெவின் ஓ’பிரையன் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 186 பந்துகளை எதிர்கொண்ட அவர், சதம் அடித்து அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நிகழ்த்தியுள்ளார். 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களை குவித்து, 139 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 5-வது நாள் ஆட்டம் நடக்கிறது. கெவின் ஓ’பிரையன் 118 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தது பற்றி கெவின் ஓ’பிரையன் கூறும்போது, ‘அயர்லாந்தின் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இருந்தாலும் 2011 -ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதம் முக்கியமானது. பெங்களூரில் நடந்த அந்தப் போட்டியில் 50 பந்துகளில் சதமடித்திருந்தேன்’ என்றார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!