Published : 15,May 2018 06:52 AM

“வதந்திகள் எனக்கு எரிச்சல் தருகிறது” மனம் திறந்த டிடி

DhivyaDharshini-is-Tamil-TV-s-Most-Desirable-Women

தன்னை பற்றிய வந்தந்திகளுக்கு தக்க விளக்கம் அளித்துள்ளார்.  

தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளிகளில் டிடிக்கு தனி இடம் உண்டு. இன்று வரை அவர் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். அந்தளவுக்கு அவர் தனது நிகழ்ச்சிகளை கலகலப்பாக வைத்துள்ளார். ஆகவே அவரை ஒரு ஆங்கில பத்திரிகை அதிகம் விரும்பத்தக்க பெண் ஆக கடந்த வருடம் தேர்வு செய்தது. அதனையொட்டி அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரிடம் அவரது சொந்த வாழ்க்கை குறித்து வெளியாகும் வந்தந்திகளை பற்றி அப்பத்திரிகை ‘உங்களை குறித்து வரும் வந்தந்திகள் மனதை பாதிக்கிறதா?’என கேள்வி எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விக்கு டிடி மனம் திறந்து பதிலளித்துள்ளார். 

அதற்கு அவர், “அது எனக்கு எரிச்சல் தருகிறது, ஆனால் நான் எப்போதும் நேர்மறையான பக்கத்தை பார்க்க முயற்சி செய்கிறேன். உதாரணமாக, என்னைப் பொறுத்தவரை ஒருபோதும் என்னை அடையாளம் காணாதவர்களை அடையாளம் காண உதவுகிறது. ட்ரோலர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கருத்து தெரிவிக்கவோ அல்லது மீண்டும் விளக்கம் அளிக்க நான் விரும்பவில்லை.

எனக்கு தவறான 15 கருத்துக்கள் கிடைத்தால், 1000க்கும் அதிகமான கருத்துகள் மற்றும் விருப்பங்கள் எனக்கு ஆதரவாக கிடைக்கின்றன. அவை பாசிடிவ் ஆனவை. ஊக்கமளிக்க கூடியவை. எல்லாவற்றிலும் உள்ள நல்ல குணத்தை நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். அத்துடன் அவரிடம் ஏன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றதற்கு “ஏன் நடிக்கவில்லை என்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கெளதம் மேனன் அழைத்தார் நடித்தேன். தனுஷ்கூப்பிட்டு ‘ப பாண்டி’யில் வாய்ப்புக் கொண்டுத்தார் நடித்தேன்” என்று கூறியிருக்கிறார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்