Published : 15,May 2018 03:26 AM

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை!

BS-Yeddyurappa-Leading-From-Shikaripura

கர்நாடகாவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகிக்கிறார்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா பின்னடைவில் இருந்தார். பின்னர் அடுத்த சுற்றில் முன்னிலைக்கு வந்தார்.

முன்னிலையில் உள்ள நிலவரங்களில் படி, காங்கிரஸ் 75 தொகுதிகளை நெருங்கும் போது பாஜகவும் 75 தொகுதிகளை நெருங்கியது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா அவர் போட்டியிட்ட சிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்