[X] Close

கர்நாடக தேர்தல் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை

Karnataka-Election-Results---BJP-Leading--Congress-Trailing

கர்நாடக தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா பின்னடைவில் இருந்தார். பின்னர் அடுத்த சுற்றில் முன்னிலைக்கு வந்தார்.

முன்னிலையில் உள்ள நிலவரங்களில் படி, காங்கிரஸ் 60 தொகுதிகளை நெருங்கும் போது பாஜகவும் 60 தொகுதிகளை நெருங்கியது. பின்னர் சட்டென முன்னிலை எண்ணிக்கையில் உயர்ந்த பாஜக 78 தொகுதிகளில் முன்னிலைக்கு வந்தது. காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதற்கிடையே மஜத 24 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close